மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் கண்காட்சி!


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் சமூக விஞ்ஞான பிரிவினால் நடாத்தப்படுகின்ற வரலாறு வாழ்வோடு இணைந்ததாக கண்காட்சியானது இன்று (25-05-2023) வியாழக்கிழமை நடைபெற்றது.

இன் நிகழ்விற்கான அனுசரணைகளை உதயகுமார் கல்வி மையத்தின் ஸ்தாபகர்  சமூக  மனிதநேய ஆர்வலர் திருவாளர்  உதயகுமார் அவர்கள்  வழங்கியிருந்தார்.  

இந்நிகழ்வின்  பிரத விருந்தினராக  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்  செல்வி அகிலா கனகசூரியம்  அம்மணி அவர்களும்  ஏனைய அதிதிகளாக     ஏனைய வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளர்கள்  மற்றும் உதவிப் பணிப்பாளர்கள்  மற்றும்  உதயகுமார் கல்வி மையத்தின்  ஸ்தாபகர்  உதயகுமார் அவர்களின்  மனைவி  திருமதி ரஞ்சினி  உதயகுமார் அவர்களும்  பாட ரீதியான ஆசிரியர்களும்  மற்றும்  மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலை மாணவர்களும்  கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட  கிழக்கு மாகாண  கல்வி பணிப்பாளர்  உதயகுமார் கல்வி மையத்தில்  கல்விக்கான சேவைகளை பாராட்டியதுடன் .  மட்டக்களப்பு மேற்கு வலயத்தின்  கல்வி மேம்பாட்டிற்காக  உதயகுமார் கல்வி மையம் ஆற்றுகின்ற சேவைகளையும்  உதயகுமார் கல்வி மையத்தின் நிறுவனர்  திருவாளர் உதயகுமார் அவர்களின்  நல் மனப் பாங்கையும்  தாராளமா குணத்தையும்  பாராட்டி இருந்தமை  சிறப்பு அம்சமாகும்.


புதியது பழையவை