பாராளமன்றத்தால் இன்று பதவி நீக்கப்பட்டுள்ள திரு ஜனக ரத்நாயக்க அவர்கள் மீது எந்தவித ஊழல் மோசடியும் இல்லை!


சுயாதீன ஆணைக்குழுவான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு ஜனக ரத்நாயக்க பாராளமன்ற வாக்கெடுப்பு மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றார்

சமநேரத்தில் மற்றுமொரு சுயாதீன ஆணைக்குழுவான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி. ஸ்.எம் சார்ள்ஸ் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்

பாராளமன்றத்தால் இன்று பதவி நீக்கப்பட்டுள்ள திரு ஜனக ரத்நாயக்க அவர்கள் மீது எந்தவித ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளும் கிடையாது

அதிகார துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளும் கிடையாது

ஆனாலும் திரு ரணில் ராஜபக்சே அரசுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாகவே பதவி இழந்து இருக்கின்றார்.

டக்ளஸ் தேவானந்தா முதல் பிள்ளையான் வரையான கிரிமினல்களும் கூட திரு ஜனக ரத்நாயக்க அவர்களை நீக்க வேண்டும் என வாக்களித்து இருக்கின்றார்கள்.

ஆனால் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி. ஸ்.எம் சார்ள்ஸ் மீது ஊழல் குற்றசாட்டுகள் இருக்கின்றன.

குறிப்பாக திருமதி பி. ஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் மீது வெள்ள நிவாரண ஊழல், காணி ஊழல் , கணனி ஊழல், மாட்டு ஊழல், தேர்தல் மோசடி , வாகன எரிபொருள் மோசடி என நீண்ட ஊழல் பட்டியல் இருக்கிறது.

இதில் வாகன எரிபொருள் மோசடி உட்பட மூன்று மோசடிகளுக்கு எதிராக சில்வா என்பவரின் தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுகள உண்மையென நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.

ஆனாலும் திரு ரணில் ராஜபக்சே அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்க ஏற்பாடு செய்த நாடகத்திற்கு ஒத்துழைத்த காரணத்தினால் வடக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டு இருக்கின்றார்.

இங்கே அரசியல்வாதிகளுக்கும் நிலைப்பாட்டுக்கும் ஆதரவாக இயங்குவதன் மூலம் தங்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்கிற செய்தி சுயாதீன ஆணைக்குழு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

21 ஆம் திருத்த சட்ட மூலம் போன்ற வரைவுகளை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டில் சுயாதீன பொது நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி விடலாம் என்கிற விடயம் பொய்ப்பிக்க பட்டு இருக்கின்றது.

ராஜபக்சே குடும்பம் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக நீதியரசர் திரு சிராணி பண்டாரநாயக்க அவர்களை பதவியிலில் இருந்து நீக்கியதற்கும் திரு ரணில் விக்ரமசிங்கே திரு ஜனக ரத்நாயக்க அவர்களை பதவி நீக்கியதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.
புதியது பழையவை