இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தம்மை பள்ளி கற்கை நெறியை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த கற்கைநெறி தொடர்பான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பண்டிகையுடன் இணைந்து குழந்தைகளுக்கு தம்மை பாடசாலை கல்வியை கட்டாயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின்படி, தம்மை பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களை தம்மை பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
