மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் தன்மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் தம்மீது தாக்குதல் நடாத்தியவர்களுக்கு சார்பாக நடப்பதாக இலங்கையின் பிரபல துள்ளிசை கலைஞர் பிரியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று(16-05-2023) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.