மட்டக்களப்பு- குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (17.05.2023) பதிவாகியுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடத்தல் கும்பல் என சந்தேகம்
இளைஞர்கள் மூவரும் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் "சிறுவர்களை கடத்தும் கும்பல்" என அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.