திருகோணமலை வந்தது இந்திய சொகுசு கப்பல்!இந்தியாவின் முதல் சர்வதேச கப்பலின் பயணத்தை(இலங்கையை நோக்கிய ), இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோ  05 ஆம் திகதி அன்று கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இதன்படி, சென்னையில் இருந்து புறப்பட்ட எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் இன்று (08 -06-2023) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.


திருகோணமலையை வந்தடைய அனைத்து ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்ததுடன், அவர் தலைமையில்,பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், திருகோணமலை கிழக்கு கடற்படை கட்டளை தளபதி, பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட பலர் உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.

மேலும் அதில் வருகை தந்த பயணிகளுக்கு, திருகோணமலையில் காணப்படும் சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. 

அதேவேளை இந்த கப்பலானது நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை