கின்னஸ் உலக சாதனைக்கான புதிய முயற்சி - மலையக இளைஞர்கள்!கின்னஸ் உலக சாதனைக்கான புதிய முயற்சிக்காக மலையகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி முகத்திடல் நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாவை - கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகிய இரட்டையர்களே இந்த நடைப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


கின்னஸ் சாதனை
566 கிலோமீட்டர் தூரத்தை குறுகிய காலத்தில் நிறைவு செய்து கின்னஸ் சாதனையை நிலைநாட்டும் நோக்கில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தமது நடைபயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, குறித்த இரட்டையர் ஜோடி இன்றைய தினம் (15.06.2023) மதியம் காலி முகத்திடலை அடைந்து தமது சாதனையை நிலைநாட்ட எதிர்ப்பார்த்துள்ளனர்.
புதியது பழையவை