நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக நகல் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பின் விவாதம் இன்று இடம்பெறும்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குற்றச்செயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கு ஆதரவளித்தல், பாதுகாப்பு வழங்குதல் சட்டமூலம், சிவில் வழக்கு கோவை திருத்த சட்டமூலம் என்பவற்றின் மீதான இரண்டாவது வாசிப்பின் விவாதம் நாளை இடம்பெறும்.
ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது.