கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் சுயம்புலிங்கப்பிள்ளையார் என்ற பெருமையினையும் கொண்ட மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய
வருடாந்த அலங்கார திருவிழா உற்சவம் (17-06-2023)இரவு ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் பண்டைய ஆலயங்களுள் ஒன்றென்ற பெருமையினைக் கொண்ட களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார திருவிழா
பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.
17-06-2023 திகதி மாலை கிரியைகளுடன் ஆரம்பமாகி கும்பபூஜை,யாகபூஜை நடைபெற்று சுயம்புலிங்கப்பிள்ளையாருக்கு விசேட அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சுயம்புலிங்கப்பிள்ளையார், சிவன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் உள்வீதி வெளிவீதியுலாவும்
நடைபெற்றது.