மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதிகள் விடுதலை!பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு, இன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஏழு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சர்
பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்ற தண்டனை கைதிகளாக சிறையில்


வைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதற்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் சிறு குற்ற செயல்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, கைதிகளான ஒரு பெண் உட்பட ஏழு கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் பிரபாகரன் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
புதியது பழையவை