மட்டக்களப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி - பெண் கைது!மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைச்சோலை, குமாரபுரம் பகுதியில், அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோத முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட
பெண் ஒருவர் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த பண்டாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, உப பொலிஸ் பரிசோதர்களான சகித்
மற்றும் கிருபாகரன் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள், புன்னைச்சோலை ,குமாரபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் மதுபான போத்தல்களுடன்
கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து 180 மில்லி லீட்டர் நிறையுடைய 165 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதுடன், மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணையும் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை