நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

மின்கட்டண திருத்த பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டணத் திருத்தம் குறித்த இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


இம்முறை 3 சதவீதம் மட்டுமே மின்சார கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், அதுவும் 0-90 அலகுகள் வரையில் மின்சார பாவணையாளர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை