மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மாபெரும் பொசன் போயா தின நிகழ்வு!மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், 11வது சிங்க ரெஜிமெந்து படை பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் பொசன் போயா அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு குருக்கள்மடம் 11ஆவது சிங்க ரெஜிமெந்துபடை பிரிவு கட்டளை அதிகாரி நிமால் பத்ம சிறி தலைமையில் இடம்பெற்ற புனித பொசன் போயா நிகழ்வில்,11ஆவது சிங்க ரெஜிமெந்து படை பிரிவினரினால் நிர்மாணிக்கப்பட்ட வெளிச்ச கூடுகள் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் ஒளி ஊட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன்,தெரிவு செய்யப்பட்ட வெளிச்ச கூடுகளுக்கான பணப்பரிசுகளும், தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.நிகழ்வில் அதிதிகளாக கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவு கட்டளை அதிகாரி நிலுபா பண்டார ,களுவாஞ்சிகுடி பிரதேச ஏ.எஸ்.பி ஜனக ரத்நாயக்க, களுவாஞ்சிகுடி


தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி அபே விக்ரமரத்ன, ஆலய குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் அனுசரணையாளர்களான. மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர் உட்பட நிகழ்வுக்கான அனுசரணையாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள், 11ஆவது சிங்க ரெஜிமெந்து படைபிரிவு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை