யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதற்கான இறுதித்தினம் நிறைவடைந்துள்ள நிலையில், துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ.கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி.வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.