மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசபையின் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (29-06-2023) வெல்லாவெளியில் நடைபெற்றது.
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசசபையினால், உலக வங்கியின் 33மில்லியன் ரூபா செலவில் கலாசார மண்டபத்திற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் கௌரிபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பு செயலாளர்