மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம்!



மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக டெங்கின் தாக்கம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் டெங்கு பரவுவதற்கு ஏதுவாகவுள்ள பகுதிகள் குறித்தும் ஆராயப்பட்டது.
கைவிடப்பட்ட கிணறுகள் மற்றும் கைவிடப்பட்டுள்ள வீடுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் மாநகரசபையின் செயற்பாடுகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் உட்பட பிரதான மக்கள் சேவை நிலையங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன் மற்றும் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.




புதியது பழையவை