குழந்தை இன்மைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பாலியல் வன்புணர்வு!



குழந்தை பெற்றெடுக்கும் கனவை நிறைவேற்றுவதற்காக சிகிச்சை பெறச் சென்ற 42 வயது திருமணமான பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 57 வயதான ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திருமணமாகி குழந்தை இல்லாததால், குறித்த பெண் தனது கணவருடன் பியகம சியாம்பலாபே பகுதியில் உள்ள சந்தேகத்திற்குரிய ஆயுர்வேத வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

கணவருடன் நான்கு தடவைகள் ஆயுர்வேத வைத்தியரிடம் சென்றதாகவும் சந்தேகம் ஏற்படாத நிலையில் கடந்த 12 ஆம் திகதி தனியாக வைத்திய நிலையத்திற்கு சென்ற போது சந்தேகநபரான வைத்தியர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியக தலைமையகத்தின் நிலைய பொறுப்பதிகாரி திருமதி சாமந்தி ரேணுகா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை