மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக கிழக்கு மாகாண ஆளுநரின் பங்குபற்றுதலுடன்
இன்று இடம்பெற்றது.


ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உள்ளிட்ட பர் கலந்துகொண்டனர்.


மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம் , சுற்றாடல், மீன்பிடி உட்பட்ட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.


மேய்ச்சற்தரை மற்றும் மகாவலி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை