திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து!யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று(30.06.2023) அதிகாலை மதுரங்குளி - கரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை