போரதீவுப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி நெடியவட்டை  பகுதியில் இரவு (22) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.


ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 35ஆம் கொலனி,கண்ணபுரம் கிழக்கு கிராமத்தை சேர்ந்த  நவேந்திரன்-ஊர்யிதன்  என்னும் 19 வயது இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த ச.லோஜன் என்னும் 23 வயது இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படு காயம் அடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை