வாக்காளர்களின் பெயர் பட்டியல் - எம்.பிக்களின் எண்ணிக்கை வெளியீடு!இலங்கையில் 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையின்படி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் தேசிய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தேர்தல் மாவட்டம்
அதேநேரம் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திகாமடுல்லயில் 7 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர் எனத் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை