வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே எச்.ஐ.வி தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் இருவரும் ஆண்கள் என கூறப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.