14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்திருகோணமலையில் 14 வயது சிறுமியை 25 வயது இளைஞன் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞனை சம்பூர் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் வெளியான தகவல்
குறித்த இளைஞன் சிறுமியை மார்ச் மாதம் அளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடல் அமைப்பிலும் நடத்தையிலும் சந்தேகம் கொண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் தமது பிள்ளை இளைஞன் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணி ஆக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பெற்றோர் முறைப்பாட்டை பதிவு செய்ததோடு சந்தேக நபரைப்பற்றி தகவலையும் வழங்கியுள்ளதையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பிணியான 14 வயது சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞனை மூதூர் நீதிவான் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை முன்னிலைபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை