தமிழ் உட்பட சுமார் 40 மொழிகளில் கூகுள் பார்ட் பயன்பாட்டில்



தமிழ் உட்பட சுமார் 40 மொழிகளில் கூகுள் பார்ட் பயன்பாட்டில் வந்துள்ளது.

அரபு, சைனீஸ், ஜேர்மன் மற்றும் ஸ்போனிஷ் போன்ற மொழிகளிலும் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் உள்ள 27 நாடுகள் உட்பட 59 புதிய நாடுகளுக்கு பார்ட் பயன்பாட்டிற்கான அணுகலைக் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது.

பயனர்கள் ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பை கேட்க விரும்பினாலோ அல்லது ஸ்கிரிப்டை கேட்க விரும்பினாலோ இப்புதிய அம்சங்கள் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

அத்துடன். பயனர்கள் பார்டின் பதில்களின் தொனி மற்றும் பாணியினை ஐந்து வெவ்வேறு விருப்பங்களுக்கு மாற்றலாம்.


ப்ராம்ட்களில் (prompt) படங்களைச் சேர்க்கும் திறன், பார்டின் பதில்களை உரக்கக் கேட்பது மற்றும் பார்டின் பதிலை நீளமாகவோ அல்லது குறைவாகவோ மாற்றும் திறன் போன்ற புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த அம்சம் ஆங்கில மொழியில் உள்ளது, விரைவில் புதிய மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை