ஆசிய தடகள போட்டிகளில் இலங்கைக்கு புதிய சாதனை!ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய இலங்கை மற்றும் ஆசிய சாதனைகளுடன் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சம்பியன்ஷிப் தொடரில் இன்று (16.07.2023) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே தருஷி தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

19 வயதான தருஷி கருணாரத்ன போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்துள்ளதுடன் 1998 ஆம் ஆண்டு சீனாவின் ஜாங் ஜியான் 2:01.16 வினாடிகளில் பதிவு செய்த சாதனையையும் முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை