மட்டக்களப்பில் தண்ணீர் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் - 6 வயது சிறுவன் உயிரிழப்பு!மட்டக்களப்பு வாழைச்சேனையில் தண்ணீர் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் நேற்று சனிக்கிழமை (29) மாலை இச் சம்பவம இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கரவண்டியில் மாலை நேர வகுப்புக்கு தனது சகோதரனுடன் சென்ற சிறுவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயரிழந்த சிறுவன்
தண்ணீர் ஏற்றி வந்த பவுஸரொன்று பின்நோக்கி சென்றபோது அதனுள் அகப்பட்ட சிறுவன் ஸ்தலத்திலேயே உயரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிரிழக்க காரணமாக தண்ணீர் பவுஸரை பொதுமக்கள் ஆத்திரத்தில் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இவ்விபத்தில் மரணமடைந்த சிறுவன் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்ற சலீம் ருஸ்திக் என்பவர் என தெரிய வந்துள்ளது.

மேலும் சிறுவனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை