தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் யாழ். பண்டத்தரிப்பு பாடசாலை சாதனைதேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேசிய பளுதூக்கல் போட்டி கேகாலை பிலிமத்தலாவை மத்திய கல்லுரியில் இடம்பெற்றது.

அந்த வகையில் வி.ஜெஸ்மினா என்ற மாணவி 18 வயதுப்பிரிவு 71 கிலோ எடைப்பிரிவில் 92 கிலோகிராமை தூக்கி தங்கப்பதக்கத்தையும், இ.றம்மியா 20 வயதுப்பிரிவு 55 கிலோ எடைப்பரிவில் 65 கிலோகிராமை தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

யாழ். மண்ணிற்கும், பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமையை தேடித்தந்த மாணவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

புதியது பழையவை