டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதிஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த 28ம் திகதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 10.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன் ஏனைய வெளிநாட்டு நாணய அலகுகளுக்கு நிகராகவும், ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எனினும் இது கடந்த காலங்களில் வீழ்ச்சி போக்கை பதிவு செய்திருந்தது.

கடந்த வாரத்தில் ஜப்பானிய யென் 15.9 சதவீதமாகவும் ஸ்ரேலிங் பவுன் 3.8 சதவீதமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை