இலங்கைக்கு பரிசாக அனுப்பட்ட சக் சுரின் யானை மீண்டும் தாய்லாந்துக்கு திரும்பியது!தாய்லாந்து அரசாங்கத்தினால், இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்பட்ட, சக் சுரின் என அழைக்கப்படும் முத்துராஜா யானையை கொண்டு செல்லும் விமானம், சற்று முன்னர் தாய்லாந்தின் பெங்காக் நகரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த யானையை அழைத்துச் செல்வதற்காக, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக சரக்கு போக்குவரத்து விமானம் இலங்கைக்கு வந்திருந்தது.

விசேடமாக தயாரிக்கப்பட்ட கூண்டில் ஏற்றப்பட்ட சக் சுரின் யானை இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இன்று அதிகாலை 4.30 அளவில் யானை அடங்கிய கூண்டை விமானத்தில் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில், உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள,நிலையில் குறித்த யானையை மீண்டும் தங்களது நாட்டுக்கு அழைத்து செல்ல தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புதியது பழையவை