புலம் பெயர் தமிழரிடம் இலங்கை ஜனாதிபதி மன்னிப்பு கோரவேண்டும்!புலம் பெயர்ந்த தமிழரிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்றைய தினம் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரான்ஸ் நாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்து எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல் தனக்கு விளங்கவில்லை ஆங்கிலம் தெரியாவிடின் தமிழில் கதைக்கும் படியும் கூறி இருந்தார்.

ஆங்கிலம் தெரியாவிடின் அது ஓர் பாரிய குற்றம் போல் சாடியிருந்தார். அவ் புலம்பெயந்தவர் அதிபர் 80 களில் கபினட் அமைச்சராக இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இருக்கலாம்.

அதிபரின் இந்த கருத்து தொடர்பில் புலம்பெயர் தேசத்தவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம். ஆங்கிலம் என்பது வெறும் மொழிஅறிவு அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை