கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து விபத்து!
யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

திருகோணமலை மொரவ பகுதியில் இன்று (02-07-2023)அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சாரதியின் கவனக்குறைவால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த வித்தில் பேருந்தின் நடத்துநர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது. 

பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை