இளைஞன் ஒருவரின் மோசமான செயல்!



அம்பாறையில் உறங்கிக் கொண்டிருந்த வேளை கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாகவும், திருடிய கையடக்க தொலைபேசியை வாங்கித் தருகின்றேன் என 1500 ரூபா பெற்றுச் சென்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் நேற்றிரவு (26-07-2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறையிலிருந்து குளத்து மீன்களை வாங்குவதற்காக வருகை தந்த மீன் வியாபாரி மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள கடைதொகுதியில் உறங்கிக் கொண்டிருந்தபோது கையடக்க தொலைபேசியை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் திருடிய நபரிடமிருந்து கையடக்க தொலைபேசியை வாங்கி வருகின்றேன் எனக்கூறி 1500 ரூபா பணத்தை வாங்கிச் சென்றுள்ளதாகவும் குறித்த கையடக்க தொலைபேசி பெற்றுத் தருமாறு கூறி குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, கையடக்க தொலைபேசியை திருடியவரும் திருடியதை வாங்கி வருகின்றேன் என தெரிவித்து பணத்தை வாங்கி சென்ற வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக இவ்வாறான மோசடியான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றவர்கள் எனவும் தெரிய வருகின்றது.


குறித்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் இன்று (27-07-2023) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ரொட்டவெவ கிராமத்தில் வசித்துவரும் 45 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
புதியது பழையவை