மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயம் கொடியேற்றம்


இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தின் வருடாந்த
மஹோற்சவம் இன்று(120-07-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


உலகநாச்சி அரசியினால் புனரமைக்கப்பட்டு காலம்காலமாக உற்சவம் தமிழர்களின் பண்பாடுகளுடன் நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய தினம் அதே
பாரம்பரியத்துடன் உற்சவம் ஆரம்பமானது.


ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் மஹோற்சவம் கிரியைகள் நடைபெறும்.

இன்று (12)காலை தாந்தாமலையில் உள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு
கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

தாந்தாமலை முருகன் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்றமானது ஏனைய ஆலயங்களில் நடைபெறும் கொடியேற்றத்திற்கு வேறுபட்டு விசேட நிகழ்வாக
நடைபெற்றுவருகின்றது.
18 தினங்கள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளதுடன் 02ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை