நாட்டில் ஆயிரம் தேசிய பாடசாலை திட்டம் தோல்வி



நாடு முழுவதிலும் சுமார் ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ஞாயிறு பத்திரிகையொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுமார் 2300 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது
அனைத்து பிரதேச செயலக பிரிவிற்கும் பௌதீக மற்றும் மனித வளங்களைக் கொண்ட  மூன்று தேசிய பாடசாலைகள் உருவாக்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த பரிந்துரையின் கீழ் சுமார் 1000 பாடசாலைகள் உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்காக சுமார் 2300 மில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் சுமார் 22 பாடசாலைகள் மட்டுமே தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என தேசிய கணக்காய்வு காரியாலயம் அண்மையில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
புதியது பழையவை