பிள்ளையானின் அணியில் இணைந்தார் - கலாநிதி பால சுகுமார்

இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இக்கடத்தலையும் கொலையையும் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு இருந்தமையை கலாநிதி பால சுகுமார் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.

இக்கடத்தலுக்கு முதல் கிழக்கு பல்கலைக்கழக கலாநிதி பால சுகுமாரை கடத்தி சென்ற பிள்ளையான் ரவீந்திரநாத் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விடுவித்திருந்தனர் என்பதற்கு கலாநிதி பால சுகுமார் சாட்சி.

இது தவிர கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்க, உட்பட பெருந்தொகையான புத்திஜீவிகளையும் இவ் உலகை விட்டு அனுப்பியதற்கு பிள்ளையான் பிரதான காரணம்.

இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் ஏற்பாட்டில், நூலியலாளர் என்.செல்வராஜாவின் நுால் வெளியீட்டில், பிரதேச வாதத்தை மூலதனமாக கொண்டு செயற்படும் பேராசிரியர். சி.மௌனகுரு, சிரேஷ்ட ஊடகவியலாளர் அரங்கம் பிரதம ஆசிரியர். பூ. சீவகன் மற்றும் பலர் அழைக்கப் பட்டிருந்தனர்.

புதிதாக பிள்ளையானின் அணியில் இணைந்தார் கலாநிதி பால சுகுமார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை கலாநிதி பால சுகுமார் ஒரு நிமிடம் நினைத்தாரா, காரணம் பிள்ளையானால் உயிர் அச்சுறுத்தல் முன்னாள் உபவேந்தர் கடத்தலை காரணம் காட்டி பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியவரே இந்த பால சுகுமார்.

கடத்தல் காரனிடம் இருந்து புத்தகத்தை வாங்கும் அந்த நிமிடத்தில் எல்லாம் மறந்த பால சுகுமார் விடயத்தில் மானமுள்ள தமிழன் அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயம்.
புதியது பழையவை