சமஷ்டியை நோக்கி பயனிப்பதே சரி - பா.அரியேத்திரன்



சுருங்கச் சொன்னால், இந்திய – இலங்கை உடன்பாட்டின் விளைவாக தமிழர்களுக்கு ஓரளவு சுயஉரிமை அளிக்கும் 13ஆவது சாசனத்திருத்தமே பறிபோகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

ஆகவே பழையன கழித்து, புதியன புகுத்தல் என்ற முதுமொழிக்கு ஏற்ப, கடந்த காலத்து விவகாரங்களை விமர்சித்து அங்கலாய்க்கும் வழிமுறையை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட அரசியல்வாதிகளுக்கு நாம் வழிமுறை காண வேண்டும். அதன் முதல் கட்டாமாக 13ஆவது சாசனத் திருத்தத்தை பாதுகாக்க இந்தியா எவ்வாறு உதவலாம் என்பதை யோசிக்க வேண்டும். என்பதை சில தமிழ்தேசிய கட்சிகள் கூறிவருவதும் அதை பாதுகாக்க பாரதப்பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதாகவும் ரெலோ, புளட், ஈபிஆர்எல்எவ் மற்றும் சில கட்சிகள் தெரிவிக்கின்றன.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி 13, பற்றி எதுவும் வேண்டாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே வேண்டும் அதையே வலியுறுத்தி தாம் கடிதம் எழுதப்போவதாக கூறியுள்ளது அவர்களின் நிலைப்பாடும் தவறானது அல்ல.

சம்பந்தன் ஐயாவும் மோடிக்கு 13 ஐ மட்டும் வலியுறுத்தி கடிதம் எழுதுவது தேவையற்றது சமஷ்டித்தீர்வை வலியுறுத்தவேண்டும் என்பதே அவரின் நிலைப்பாடாக அவதானிக்கலாம்.

இப்படியான பல கருத்துகள் உள்ளது உண்மை இதில் அவதானிக்கப்பட வேண்டியது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கடந்த 1987, யூலை 29, கையொப்பம் இட்டு தற்போது 2023, யூலை, 29 இந்தமாதம் 36, ஆண்டு நினைவு நாள்.

36, வருடம் கடந்தும் பாரதப்பிரதமர் மோடிக்கு 13, ஐ அமுல்படுத்தும்படி கடிதம் எழுதும் ஒரு நாடகம் அல்லது தேவை இப்போது அவசியமா என்பது பலரிடம் உள்ள கேள்வி ?

ஏனெனில் இந்தியப்பிரதமராக் இருந்த ராஜீவ்காந்தியும், இலங்கை ஜனாதிபதி ஜே ஆரும் செய்த ஒப்பந்தம் இது தற்போதய பாரதப்பிரதமருக்கு 13, மட்டும் நடைமுறைபடுத்துமாறு எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை தமிழ்தேசிய கட்சிகள் கையொப்கம் இட்டு அனுப்புவது அது ஒரு ஆவணமாகவே இந்திய பிரதமர் பார்பார்.

நாம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் அது கிடைக்கவில்லை அதற்கான மாற்று தீர்வாகவே சமஷ்டி அடிப்படையிலான சுயநிர்ணய உரிமை வேண்டும் என்ற நிலைப்பாடுதான் சகல தமிழ் மக்களினதும் கோரிக்கை என்பதை எல்லா தமிழ்தேசிய கட்சிகளும் இப்போது எழுத்துமூலமாக சர்வதேச நாட்டு தலைவர்களுக்கு கொடுக்கவேண்டியதுதான் நல்லது.

அதற்காக 13, பற்றி கதைக்கவேண்டாம் என்பது அல்ல கதைப்பதற்கும் எழுத்துமூலமாக ஆவணமாக வழங்குவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை கருத்தில் கொண்டு பாரதப்பிரதமர் மோடிக்கு சம்ஷ்டித்தீர்வை கேட்டு கடிதம் வழங்குவதே நல்லது.

ஏனெனில் இலங்கை ஜனாதிபதி ரணில் மோடியை சந்திக்கும்போது தமிழ்தேசிய கட்சிகள் எதை வலியுறுத்தியுள்ளனர் என்பதை கட்டாயம் மோடி ரணிலுக்கு வலியுறுத்தும்போது சமஷ்டித்தீர்வை கைவிட்டு விட்டார்கள் இப்போதும் 13,ஐ த்தான் கேட்கிறார்கள் அதை அமுல்படுத்திங்கள் என கூறுவதற்கு வாய்புள்ளது.

எனவே எப்போதும் தமிழ் தலைவர்கள் குறைந்த பட்ச தீர்வை உலகத்தலைவர்களுடம் வலியுறுத்தும் இராஜதந்திர அரசியலை கைவிட்டு சுயநிர்ணய சமஷ்டித்தீர்வு பற்றி செயல்படும் அரசியலே இப்போது தேவை.!

பா.அரியேத்திரன்
புதியது பழையவை