மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் பலசரக்கு கடைத்திருட்டு!மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பழுகாமம் பகுதியில் பூட்டியிருந்த பலசரக்கு கடையொன்று உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காம கந்தனை தர்சிப்பதற்காக தனது கடையை பொருட்களை திருடர்கள் திருடிச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கடையின் உரிமையாளார் கடையை பூட்டிவிட்டு கதிர்காம கந்தனை தரிசிக்க சென்றுள்ள நிலையில் கடையின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை அப்பதி மக்கள் கண்டு கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற தடவியல் பிரிவு பொலிஸார்,

பணம் வைத்துள்ள பெட்டி உடைக்கப்பட்டு அங்கு பணம் திருட்டுப் போயுள்ளதாகவும் கடை உரிமையாளரை தொடர்பு கொண்டபோது கதிர்காமத்தில் இருப்பதாகவும், அவர் திரும்பி வந்த பின்னரே ஏனைய பொருட்கள் திருட்டுபோயுள்ளதா என கண்டறியமுடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை