மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் மீளாய்வுக் கூட்டம்!மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (12-07-2023) செயலகத்தின் அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இராஜாங்க அமைச்சரும் பிரதே அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான
சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் ஓழுங்கமைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
கலந்துகொண்டார்.

பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் நடைபெற்றுவரும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறும்
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இனங்காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் பிரச்சினைகளுக்கான
தீர்வுகளும் காணப்பட்டன.


புதியது பழையவை