இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் புதிய அதிகாரம்இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளன.

அதன்படி அனைத்து பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றி வரும் கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான்களாக செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின் அடிப்படையில், கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான நீதவான்களாக செயல்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


1978 ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்பு சட்டத்தின் பிரகாரம் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை