மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் - இரு வீடுகள் உடைத்து கொள்ளை!மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பூட்டியிருந்த இரு வீடுகளை உடைத்து அங்கிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி முகமட் தெரிவித்துள்ளார்.


அத்துடன், வெல்லாவெளி கமலநசேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுண் ஆபரணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை