முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லை!தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜாவின் சிகிச்சை தற்போது தாய்லாந்து கால்நடை மருத்துவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.

முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதில்லை என தாய்லாந்தின் சுற்றாடல் அமைச்சர் வரவுட் சில்பா-அர்ச்சா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், யானையை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய இரண்டு யானைகள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை