பணிப்பெண்ணுக்கு சவூதியில் நேர்ந்த அவலம்!சவூதி அரேபியாவில் வீட்டு வேலை செய்யச் சென்ற பெண்ணொருவர் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.


தலவாக்கலை, லிந்துல கனிகல் தோட்டத்தில் வசிக்கும் 30 வயதுடைய தாயே இவ்வாறு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மொழியை சரியாக கையாள முடியாததால் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகவும், கைகள், தொடைகள் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரது உடலில் இருந்து இரண்டு ஊசிகளை அகற்றியுள்ளதுடன் மீதியுள்ள ஊசிகளையும் அகற்ற சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை