ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாத இனவாத இனவழிப்பு அரசிடம் இருந்து இராசதந்திரம் கற்க வேண்டும்ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தவுடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தமது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சிங்கள தேரவாத இனவாத இனப்படுகொலை அரசு இந்திய அரசைக் கையாளும் போது தம்மை பௌத்தராக வேடமணிந்தும் இந்துவாக உருமாறியும் திருப்பதி தொடக்கம் அயோத்தி வரை.. இராமர் தொடக்கம் புத்தர் வரை வணங்கி ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்து ஈழத்தமிழர்களை இன்றுவரை இனவழிப்பும் இனப்படுகொலையையும் செய்து வருகின்றனர்.

இலங்கை பேரினவாத அரசு அப்பாவி இஸ்லாமிய மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று அலி சப்ரி, ஹிஸ்புல்லா, மஸ்தான், ரிசாட் பதியுதீன் ஆகியோரை கொண்டு இஸ்லாமிய நாடுகளை கையாண்டு வெற்றி அடைகின்றனர்.
மறுமுனையில் அப்பாவி இஸ்லாமிய மக்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

இலங்கை அரசு நாட்டுக்கோர் வேடமணிந்து தமது நலனைப் பேணி தமது அரசைப் பாதுகாத்து ஈழத்தமிழர்களை இனவழிப்பு தொடர்ச்சியாக செய்திட, 

*ஈழத்தமிழர்கள்* என்ற இனமானது 21 ஆம் நூற்றாண்டில் மிக மோசமான இனவழிப்பிற்கு உள்ளான பின்பும் அரச அறிவியலில் ஞானம் பெற்று இராசதந்திர முறையில் தமது நகர்வுகளை மேற்கொள்ள முன்வராமல், 

சனநாயக வழிமுறைக்குள் நின்று இராசதந்திர வழிமுறையில் போராடுகின்றவர்களை பார்த்து ஏதோ ஒரு நாட்டின் முகவர்கள் எனக் கூறி தாமும் அழிந்து தமது இனத்தையும் அழிக்க தீவிரமாக செயலாற்றி வருகிறனர். 

இந்த நிலை மாற வேண்டும் ஈழத்தமிழர்களின் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள், அரசியல் விமர்சகர்கள், மனித உரிமை செயற்பாடுகளில் உள்ளவர்கள் நீதியாக தமது எழுத்துப் பேனாக்களை கூர்மையாக்க வேண்டும். 

*நான் சாகலாம்* 
*நாங்கள் சாகக் கூடாது* 

காவியா 
17/07/2023 
12.18
பெரிய பிரித்தானியா
புதியது பழையவை