குளவி தாக்குதலுக்கு இலக்காகி - பெண் ஒருவர் உயிரிழப்பு!லிந்துலையில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன பம்பரகலை தோட்டத்தில் வசிக்கும் 80 வயதுடைய பெண் தொழிலாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர் தோட்ட தொழிலில் ஓய்வு பெற்றவர் இருப்பினும் கைகாசுக்கு தோட்டத்தில் தேயிலை கொய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த போதே குளவி கொட்டுக்கு உள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை