இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - ஒருவர் உயிரிழப்பு!பளை இத்தாவில் பகுதியில் இன்று(15-07-2023) சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளியவளை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை