உலகில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் திரைநீக்கம்!



பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வாக உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது.

சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது.

உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிற்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

காலம்:18/07/2023
நேரம்:18h30
இடம்: Parc de la mare à la veuve Rue de Metz, 93140 Bondy
புதியது பழையவை