மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக பத்து மதுபான சாலைகளுக்கு விண்ணப்பங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக பத்து
மதுபான சாலைகளுக்கு விண்ணப்பங்கள் 
செய்யப்பட்டுள்ளது. 

புலிபாய்ந்த கல் வீதி, கிரான்
பதுளை வீதி,கொடுவாமடு
5ம் கட்டை, ஆயித்தியமலை தேவாலயம் அருகில் 
வாழைச்சேனை, பிரதான வீதி 
ஊறணி, ஞானசூரிய சதுக்கம் மட்டக்களப்பு 
போன்ற இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் கூடுதலான விண்ணப்பங்கள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் அவர்களுடடைய பினாமிகள் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

இது விடயத்தில் பிள்ளையான் அவர்களின் இதயசுத்தியை வெளிப்படுத்த வேண்டும். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதற்கான தடையை ஏற்படுத்த இரண்டு ராஜாங்க அமைச்சர்களும் செயற்பட வேண்டும்  அதே வேளை குறித்த பிரதேச மக்கள், சமூக சங்கங்கள் மதுக்கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இதனை தடுக்க முடியும் எனவே இதனை தடுப்பதற்கான உங்கள் எதிர்ப்பு போராட்டமே ஒரே வழி.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு 

புதியது பழையவை