மட்டக்களப்பு ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை இன்றும் பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்!



மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியை இன்று (25-07-2023) பிள்ளையான் அச்சுறுத்தியுள்ளார்.

இன்று (25)மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றபோது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒழுங்கான முறையில் இடம் ஒதுக்காமை தொடர்பாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டபோது இடையில் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவன வெளியில் அனுப்புங்கடா இவனை உள்ளே விட்டது யார் என்று அச்சுறுத்தியதுடன் சைகை பாசையிலும் ஏதோ சொல்ல முற்பட்டுள்ளார்.

உண்மையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பது தொடர்பாக பல தடவை இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் கவனம் எடுக்காத காரணத்தினால் இன்றும் ஊடகவியலாளர்கள் சரியான இடம் இன்மையால் இடையூறாக இருக்கின்றார்கள் என்று ஆளுநர் கூறியிருந்தார்.


இதற்கான காரணம் என்ன என்று அவரை தெளிவுபடுத்த முற்பட்டபோதே இராஜங்க அமைச்சர் சந்திரகாந்தன் ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

சந்திரகாந்தன் பிள்ளையான் இவ்வாறு ஊடகவியலாளர்களை அடக்கி ஆழ நினைப்பது என்பது ஊடக சுதந்திரத்திற்கு ஒரு சவாலாகவே மட்டக்களப்பில் மாறியுள்ளது.


கடந்த காலங்களில் பல ஊடகவியலாளர்களை இழந்த நாம் இன்றும் அதே தொணியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் இறுதியில் ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி ஆளுநர் அழைத்துச் சென்று பிரச்சினை தொடர்பாக கலந்து ஆலோசித்ததுடன் இதற்கான நிரந்தரமான தீர்வு ஒன்றினை மிக விரைவில் எடுத்து தருவதாக உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




புதியது பழையவை