ஆபாச புகைப்படங்களை வைத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட யுவதிக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய விதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

யுவதிக்கு கடும் எச்சரிக்கை
இதன்படி குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1, 500 ரூபா தண்டமாக வழங்குமாறு உத்தரவிட்ட பிரதான நீதவான் மீண்டும் அவ்வாறான தவறுகளைச் செய்ய வேண்டாம் என யுவதியைக் கடுமையாக எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களை மீளபெறப்முடியாதவாறு நீக்கவும் சிம் கார்ட் மற்றும் மெமரிகளில் உள்ளவற்றை அழிக்கவும் அனுராதபுரம் பொலிஸ் தகவல் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஐ.சி.பி. இலங்கசிங்கவுக்கும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
புதியது பழையவை