செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல்!செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.


வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது எம்.கே. சிவாஜிலிங்கம் உயிரிழந்த மாணவிகளுக்கு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை  சிறுவர் இல்லத்தின் மீது  வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 63 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை